வவுனியாவில் காலி முகத்திடல் போராட்டக்காரரின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

1592

ஆர்ப்பாட்டம்..

காலி முகத்திடல் போராட்டக்காரார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வை பதவி விலகுமாறு கோரியும் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக அரகல போராட்ட ஆதரவாளர்களால் இன்று (22.07) மாலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘அரகல போராட்டகாரர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டிக்கின்றோம், முடிவல்ல இதுவே தொடக்கம், போராட்ட பூமியில் மக்கள் உணர்வுகளை தீண்டாதே,

வேண்டாம் வேண்டாம் ரணில் விக்கிரமசிங்க, மக்கள் குரலை நசுக்காதே, மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளி’ என கோசங்களையும் எழுப்பியிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.