அம்மா, அப்பாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விமானி : மனம் நெகிழ வைக்கும் வீடியோ!!

1861

விமானி..

விமானி ஒருவர் தனது தாய் மற்றும் தந்தையை விமானத்தில் அழைத்துச் சென்ற வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்துக்காக பல சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்கள்.



குழந்தைகளுக்கான வானத்தில் அவர்கள் சிறகசைக்க, வாழ்வில் மிகப்பெரிய தியாகங்களை செய்யும் பெற்றோர்களை நாம் பார்த்திருப்போம். சமூகத்தில் தங்களது பிள்ளைகள் நல்ல நிலைக்கு வருவதையே தங்களது லட்சியமாகவும் பெற்றோர்கள் கருதுகிறார்கள்.

இப்படி தங்களுடைய குழந்தைகளை நல்ல நிலைக்கு அழைத்துச் செல்ல ஒவ்வொரு நாளும் போராடிய பெற்றோர்க்கு ஈடு இணையே கிடையாது. அந்த வகையில், தன்னை படிக்க வைத்து விமானியாக மாற்றிய தன்னுடைய தாய் மற்றும் தந்தைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் மகன் ஒருவர்.

தனியார் விமான நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்து வருகிறார் கமால் குமார். ஜெய்ப்பூரை சேர்ந்த இவருக்கு வெகுகாலமாகவே ஒரு ஆசை இருந்திருக்கிறது. தான் விமானத்தினை இயக்கும்போது தனது பெற்றோரும் அந்த விமானத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் அது.

இதற்காக பல ஆண்டுகள் அவர் காத்திருந்திருக்கிறார். அவருடைய இந்த நீண்டகால ஆசை சமீபத்தில் நிறைவேறியிருக்கிறது. இதனை இவர் வீடியோவாக வெளியிட, சமூக வலை தளங்களில் இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.