மெய்பாதுகாவலர் மரணித்த பின்னரும் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கும் நீதிபதி இளஞ்செழியன்!!

1174

நீதிபதி இளஞ்செழியன்..

நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளன. நீதிபதி எம்.இளஞ்செழியன் மற்றும் அவரது பாதுகாவலர்களை இலக்கு வைத்து நல்லூரில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் அவரது, மெய்ப்பாதுகாவலர் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் 2017ம் ஆண்டு ஜூலை 22ம் திகதி இடம்பெற்றிருந்தது. இதில் பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமசந்திர என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இந்நிலையில், தனது மெய்பாதுகாவலர் உயிரிழந்து ஐந்து ஆண்டுகள் ஆகியுள்ள போதும் குறித்த குடும்பத்திற்கு குறிப்பாக சரத் ஹேமசந்திரவின் பிள்ளைகளுக்கு ஆதரவாகவே நீதிபதி இளஞ்செழியன் இருந்து வருகிறார்.