வவுனியாவில் சீரான முறையில் 1060 பேருக்கு லிற்றோ சமையல் எரிவாயு விநியோகம்!!

1734

சமையல் எரிவாயு..

வவுனியாவில் 1060 பேருக்கு சீரான முறையில் லிற்றோ சமையல் எரிவாயு இன்று (23.07) வழங்கப்பட்டது. வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள மைதானத்தில் வைத்து குறித்த சமையல் எரிவாயு வழங்கப்பட்டது.

லிற்றோ நிறுவனத்தினர் மற்றும் விளையாட்டு மைதான கழகத்தினர் இணைந்து அப்பகுதி கிராம சேவையாளரின் ஆலோசனைக்கு அமைய அங்கு வருகை தந்திருந்த மக்கள் 1060 பேருக்கு சீரான முறையில் எந்தவித குழப்பங்களுமின்றி இலக்க சிட்டைகளை வழங்கி சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட்டது.

இதேவேளை வவுனியாவில் கடந்த சில வாரங்களில் மாத்திரம் 4000க்கு மேற்பட்ட லிற்றோ சமையல் எரிவாயு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.