கோயம்பேட்டில்..
மஞ்சுளா கோயம்பேட்டில் உள்ள தனியார் கால் செண்டரில் வேலைக்கு சேர்ந்துள்ளார். சந்தோஷ் வீட்டுக்கு அருகே நூல் நெசவு கம்பெனியொன்றில் பணி புரிந்து வந்துள்ளார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கடந்த 4 மாதங்களாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் ஒன்றாக வாழ்ந்து வந்த மஞ்சுளா – சந்தோஷ் குமார் என்ற நபர்களில் மஞ்சுளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தோஷ் குமார் என்பவர் காவல் கட்டுப்பட்டறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதன் அடிப்படையில் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடம் சென்று பிரேத விசாரணை நடத்திய போது முகம் மற்றும் கழுத்து பகுதியில் நக காயங்கள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து உடற்கூராய்வுக்காக மஞ்சுளாவின் உடலை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மஞ்சுளாவுடன் கடந்த நான்கு மாதங்களாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் ஒன்றாக தங்கி வந்த சந்தோஷ் குமாரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சந்தோஷ் குமார் மஞ்சுளாவை கொலை செய்து துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடியது தெரியவந்தது.
இதனையடுத்து சந்தேக மரணம் வழக்கை கொலை வழக்காக மாற்றி சந்தோஷ்குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட மஞ்சுளா(23) என்பவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியை சேர்ந்தவர் என்பதும், கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ் குமார்(21) அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.