வவுனியா வேப்பங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட அமைதியின்மை : 7 பேர் கைது!!

3248

7 பேர் கைது..

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (23.07) மாலை முதல் இன்று (24.07) அதிகாலை வரை எரிபொருள் விநியோகம் இடம்பெற்றது.

வாகன இலக்கதகடுகளின் கடைசி இலக்கமான 0,1,2 ஆகிய இலங்க மோட்டர் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், சொகுசு கார்கள் என்பவற்றுக்கு எரிபொருள் விநியோகம் இடம்பெற்றது.

இந்நிலையில், எரிபொருள் பெறுவதற்கு செல்லுமிடத்தில் வாகனங்கள் கூடியமையால் வரிசையில் நின்றோருக்கும், ஏனையவர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டு அமைதியின்மை நிலவியது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த நெளுக்குளம் பொலிசார் அமைதியின்மை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 7 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.