வட பிராந்தியத்தில் விவசாயத் துறையை நவீனமாக்கும் செயற்றிட்டம் முன்னெடுப்பு!!

907

வட பிராந்தியத்தில்..

விவசாயத் துறையை நவீனமாக்கும் செயற்றிட்டம் அவத்தை 01 ஆனது (Component 01) பெறுமதிச் சங்கிலி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் இலங்கையினுள் ஓர் ஏற்றுமதி நோக்க இறக்குமதிப் பதிலீட்டு வர்த்தக விவசாயத் தொழிற்றுறையை உருவாக்கும் நோக்கில்,

விவசாயிகளுக்கு விவசாய ஏற்றுமதி கைத்தொழில் முயர்ச்சியாளர்களுக்கு குறைந்த உற்பத்திச் செலவில் உயர் தொழினுட்ப முறைகளைப் பயன்படுத்திக் கூடிய தரத்துடன் உயர் உயர் பயனினை பெறுவதை நோக்காகக் கொண்ட ஒருநிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறுபயிர்ச்செய்கை, அவை சார்ந்த தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் நடத்தப்படுகிறது.

விவசாயத் துறையை நவீனப்படுத்தும் செயற்றிட்டம் (பெறுமதிச் சங்கிலி நிகழ்ச்சித் திட்டம்) உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தினூடாக (IDA) மேற்படி செயற்றிட்டத்துக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது.

தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு விவசாயத் துறையின் பங்களிப்பைக் கூட்டும் நோக்கில் விவசாய வணிக உற்பத்திகளின் பெறுமதிச் சங்கிலி அபிவிருத்தி தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அதற்கமைய, விவசாயத் துறையை நவீனப்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முனைவோரின் விவசாய வணிகத்தை அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் கீழ் விவசாய வணிகத்தைத் தொடங்கவும் விரிவாக்கவும் வட பிராந்திய அலுவலகத்தின் எல்லைக்குட்பட்ட வட மாகாணத்தில் நான்கு தொழில் முனைவோருக்கான மானியம் அண்மையில் ரூபா 34 மில்லியன் கொழும்பிலுள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் திட்டப்பணிப்பாளர் திரு ரோஹன கமகேயின் தலைமையில் வழங்கப்பட்டது.

அதாவது யாழ்ப்பாணத்தில் Jaffna Horticulture Pvt Ltd 8.9 மில்லியன் மிளகு, கறுவாய் மிளகாய் தூள் உற்பத்திகாகவும், Ms Glob Multi Traders (Pvt) Ltd 8.3 மில்லியன் கடலட்டை வளர்ப்பிக்காகவும், VK coco pvt ltd 7.4 மில்லியன் தும்பு சார்ந்த உட்பத்திகளுக்காகவும், கிளிநொச்சியில் Rajakanapathi food manufactures Pvt Ltd 8.7 மில்லியன் பால் சார்ந்த பெறுமதிசேர் உட்பத்திக்காகவும் வழங்கப்பட்டது.