காட்டுக்குள்ள விறகு பொறுக்க போன பெண்க்கு கிடைத்த அதிஷ்டம்; ஒரே நாளில் லட்சாதிபதியான சுவாரஸ்யம்..!

1717

மத்திய பிரதேசத்தில்..

மத்திய பிரதேச மாநிலத்தில் காட்டுக்குள் விறகு பொறுக்கப்போன பெண்ணுக்கு வைரக்கல் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் ஒரேநாளில் அவரது வாழ்க்கை மாறியிருக்கிறது. மத்திய பிரதேசத்தின் உள்ள பன்னா மாவட்டத்தில் பல வைர சுரங்கங்கள் இருக்கின்றன. இங்கு உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த சுரங்கங்களில் வைரம் தேடுவது வழக்கம்.

அப்படி, சாதாரண மக்கள் இந்த சுரங்கங்களில் வைரத்தினை கண்டுபிடித்தால், அதனை அதிகாரிகளிடத்தில் .ஒப்படைக்க வேண்டும். அரசு அந்த வைரத்தினை ஏலத்தில் விட்டு, அந்த தொகையை வைர கல்லை கண்டுபிடித்தவருக்கு வழங்கும். அதே நேரத்தில் ஏல தொகையில் இருந்து குறிப்பிட்ட சதவீத பணத்தை வரியாகவும், ராயல்டியாகவும் அரசுக்கு செலுத்த வேண்டும்.

மத்திய பிரதேச மாநிலத்தின் பன்னா மாவட்டத்தில் உள்ளது புருஷோத்தம்பூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த ஜெண்டா பாய் என்பவர் உள்ளூரிலேயே விறகு கடை நடத்தி வருகிறார். இதற்காக அருகில் உள்ள கட்டுக்குள் சென்று விறகு பொறுக்குவது இவரது வாடிக்கை. அந்த வகையில் புதன்கிழமை காட்டுக்குள் விறகு சேகரிக்க சென்றிருக்கிறார் பாய்.

அப்போது மண்ணுக்கடியில் பளபளப்பாக ஒரு பொருள் இருப்பதை பார்த்த அவர் உடனடியாக அதனை கையில் எடுத்து பார்த்திருக்கிறார். அது வைரம் தான். உடனடியாக உள்ளூரில் இருக்கும் வைர கற்களை ஆராயும் அலுவலகத்துக்கு சென்றிருக்கிறார். அப்போது, அங்கிருந்த அதிகாரிகள் பாய் வைத்திருந்த வைரக்கல்லை ஆய்வு செய்தபோது அது 4.39 கேரட் இருந்திருக்கிறது.

இதுகுறித்து பேசிய வைர ஆய்வாளர் அனுபம் சிங்,”அவர் கொண்டுவந்திருந்த வைரம் 4.39 கேரட் இருந்தது. அது தற்போது டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. அரசு விதிமுறைகளின் அடிப்படையில் இந்த வைரம் ஏலத்தில் விடப்படும். அதிகபட்சமாக இந்த வைரம் 20 லட்சத்துக்கு ஏலம் போகலாம் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

ஜெண்டா பாய் உள்ளூரிலேயே வீட்டு வேலைகளையும் செய்து வருகிறார். அவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர். இதுபற்றி அவர் பேசுகையில்,”என்னுடைய மகன்கள் மற்றும் மகள்கள் திருமணம் செய்துகொள்ளக்கூடிய வயதில் இருக்கிறார்கள். இந்த பணத்தை கொண்டு எங்களுக்காக ஒரு வீடு கட்ட வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.

 

பன்னா மாவட்டத்தில் 12 லட்சம் கேரட் வைரம் வெட்டியிடுக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு மக்களுக்கும் இந்த சுரங்களில் பணிபுரிய அதிக ஆர்வம் இருந்துவருகிறது. இந்நிலையில் ஜெண்டா பாய் என்னும் பெண்ணுக்கு அங்குள்ள காட்டில் இருந்து வைரக்கல் கிடைத்த சம்பவம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.