பாடசாலை மாணவன் விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் காரணம்!!

1482

தருமபுரியில்..

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பிளஸ் 1 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த மிட்டாநூலஅள்ளியை சேர்ந்த தமிழ்செல்வன் மகன் பிரகாஷ் (17).



இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். மாணவனுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் வயிற்றுவலி காரணமாக அப்பண்டிஸ் ஆப்ரேசன் செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மீண்டும் வயிற்று வலி காரணமாக வீட்டிற்கு வெளியே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தபோது இவருடைய பெற்றோர் உனக்கு ஏன் அடிக்கடி வயிற்று வலி வருகிறது என திட்டியுள்ளனர்.

இதனால் மன வேதனையடைந்த பிரகாஷ் வீட்டிற்கு உள்ளே சென்று மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக தகவல் தெரிந்து அதியமான் கோட்டை போலீசார் பிரேதத்தை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.