மண்டியிட்டு காதலை வெளிப்படுத்திய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி : வைரலாகும் வீடியோ!!

1436


இன்ப அதிர்ச்சி.ஆண் தோழனிடம் மண்டியிட்டு காதலை வெளிப்படுத்திய பெண்ணுக்கு, பதிலுக்கு அவர் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. பொதுவாக ஒரு ஆணோ பெண்ணோ ஒரு முழங்காலில் மண்டியிட்டு ‘என்னை திருமணம் செய்து கொள்வாயா?’என மோதிரத்துடன் ப்ரொபோஸ் செய்வார்கள்.ஆனால், இப்போது இணையத்தில் வேகமாக பரவிவரும் ஒரு வீடியோவில், ஒரு பெண் தனது ஆண் நண்பரிடம் எதிர்பாராத விதமாக, ஒற்றைக்காலில் மண்டியிட்டு மோதிரத்துடன் தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக ப்ரொபோஸ் செய்துள்ளார்.
அப்போது, அந்த ஆண் அதனை ஏற்பார் அல்லது நிராகரிப்பார் அல்லது எப்படி எதிர்வினையாற்றுவார் என்ற ஆவல் எழும் நிலையில், பதிலுக்காக காத்திருந்த அப்பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சியாக, அவரும் அதே நேரத்தில் மோதிரத்தை நீட்டி மண்டியிட்டு காதலை வெளிப்படுத்தியுள்ளார்.


ஆண் மற்றும் பெண் இருவரும் ஒரே நேரத்தில் ஒருவரையொருவர் ப்ரொபோஸ் செய்யும் இந்த அழகான வீடியோ தற்போது வேகமாக பரவிவருகிறது. வைரலான அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் ViralHog பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. வீடியோவின் முடிவில் இருவரும் முத்தங்களை பகிர்ந்துகொண்டனர்.

View this post on Instagram


A post shared by ViralHog (@viralhog)