டிக்-டாக்கில் பதிவிட்ட மனைவியை 14000 கிமீ பயணம் செய்து கொலை செய்த கணவன்!!

2659


டிக்-டாக்கில்..தனது விவாகரத்து குறித்து டிக்-டாக்கில் பதிவிட்ட முன்னாள் மனைவியை சுமார் 1400 கிமீ பயணம் செய்து கொலை செய்த பாகிஸ்தானை சேர்ந்த ரஹீல் அகமது என்ற நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சமீபத்தில் அமெரிக்காவின் சிகாகோவிற்கு இடம்பெயர்ந்த பாகிஸ்தானி அமெரிக்க புகைப்பட கலைஞர் சானியா கான் Sania Khan(29) தனது கொடுமையான கடந்த கால திருமண வாழ்க்கை குறித்தும் அவற்றில் தான் பெற்ற கஷ்டங்களை விளக்கி டிக்-டாக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
இதனை இணையத்தில் பார்த்த அவரது முன்னாள் பாகிஸ்தானி கணவர் ரஹீல் அகமது Raheel Ahmad (39) மிகுந்த கோவமடைந்ததுடன், ஜார்ஜியா முதல் சிகாகோ வரை சுமார் 1400 கிமீ தொலைவிற்கு பயணம் செய்து தனது முன்னாள் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


இதுத் தொடர்பாக சிகாகோ உள்ளுர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், ரஹீல் அகமது கடந்த சில நாட்களாக காணவில்லை என்றும் அவரது முன்னாள் மனைவியை சந்திக்க சென்று இருக்கலாம் என்றும் பொலிசாரிடம் புகார் ஒன்றினை அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சானியா கானின் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை மேற்கொண்ட பொலிஸார், ரஹீல் அகமது மற்றும் சானியா கான் இருவரும் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது.


சானியா கான் சம்பவ இடத்திலேயே இறந்தாக அறிவிக்கப்பட்ட நிலையில், ரஹீல் அகமது மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டார்.