கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த நடிகை & அமைச்சர் ரோஜா : இப்படி கூட சாதனை செய்யலாமா?

1583


தொண்ணூறுகளில்..தொண்ணூறுகளில் பிரபல நடிகையாக தென் இந்திய சினிமாக்களில் வலம் வந்தவர் நடிகை ரோஜா. இதன் பின்னர், இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை திருமணம் செய்த ரோஜா, அவ்வப்போது சினிமாக்களில் தலை காட்டி வந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, தீவிர அரசியல் பணிகளிலும் ரோஜா ஈடுபட்டு வருகிறார்.தொடர்ந்து, சட்டமன்ற தேர்தலில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரி தொகுதியில் போட்டியிட்ட ரோஜா, அதில் வெற்றியும் பெற்றிருந்த நிலையில், ஆந்திரா மாநிலத்தின் சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராகவும் தற்போது செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், அமைச்சர் ரோஜா தற்போது அசத்தலான ஒரு உலக சாதனையையும் படைத்துள்ளார். ரோஜா வெளியே எங்கு சென்றாலும் அவர் தொடர்பான செய்திகள் அதிக அளவில் இணையத்தில் வைரலாகும். அந்த வகையில், விஜயவாடாவில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நிகழ்ச்சிக்காக ரோஜா கலந்து கொண்டார். தொடர்ந்து, அந்த மண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த மேடை ஒன்றிலும் ரோஜா தோன்றினார்.


அப்போது, அமைச்சர் ரோஜாவை சுற்றி, சுமார் 3000 போட்டோகிராபர்கள் நிறுத்தி வைக்கப்பட்டனர். ஒன் க்ளிக் ஆன் சேம் டைம் என்ற அர்த்தத்தின் படி, ஒரே நேரத்தில் 3 ஆயிரம் புகைப்பட கலைஞர்களும் அமைச்சர் ரோஜாவை போட்டோ எடுத்தனர்.

தெலுங்கு பேசும் மாநிலங்களில் உள்ள போட்டோ டெக் மற்றும் போட்டோ மற்றும் வீடியோகிராபர் நல சங்கம் நடத்திய இந்த நிகழ்ச்சியில் ரோஜா கலந்து கொண்டார். அப்போது தான், அவரை 3000 புகைப்பட கலைஞர்கள் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் புகைப்படம் எடுத்தனர். இதன் மூலம், வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் கின்னஸ் புத்தகத்திலும் ரோஜா இடம் பிடித்துள்ளார். அதே போல, மேடையில் நின்ற நடிகை ரோஜா, புகைப்பட கலைஞர்களுடன் செல்ஃபியும் எடுத்துக் கொண்டார்.


ஒரே நேரத்தில் நிறைய பேர் புகைப்படம் எடுத்த பெண் அமைச்சர் என ரோஜாவின் பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், பலரும் அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.