விஜய் விக் எங்கடா : சர்ச்சையில் சிக்கிய தொகுப்பாளினி பிரியங்கா!!

1118


விஜய் டிவியில்..விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவர் பிரியங்கா. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் முக்கிய நபராக இருக்கிறார்.நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகை அமலா பால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட போது, அவருடைய படத்தின் ஹீரோக்களின் கதாபாத்திரங்களின் விஜய் டிவியின் நகைச்சுவையாளர்கள் வேடமிட்டு வந்து சர்ப்ரைஸ் கொடுத்தார்கள்.
அப்போது தலைவா படத்தில் வரும் விஜய் போல யோகி வேடமிட்டு வந்தார். அவர் விஜய் கேட்பிற்கு ரஜினிகாந்தின் விக் அணிந்திருந்ததை பார்த்த பிரியங்கா, விஜய் சார் விக் எங்கடா, நீ அணிந்திருப்பது ரஜினி சார் விக் என கிண்டலாக கூறியுள்ளார். இதை தற்போது மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.