பெட்ரோல் நிலையத்திற்கு அருகில் நின்றுகொண்டு இளம்பெண்கள் செய்த மோசமான செயல்!!

2174


பிரித்தானியாவில்..பிரித்தானியாவில், இரட்டையர்களான இளம்பெண்கள் இருவர் பெட்ரோல் நிலையம் ஒன்றின் அருகில் நின்றுகொண்டு தங்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துக்கொள்வதாக மிரட்டல் விடுத்தார்கள்.இங்கிலாந்திலுள்ள Canterbury என்ற இடத்தில் வாழும் இரட்டையர்களான Brittany மற்றும் Bethany Lee (23) ஆகிய இருவரும் பொலிசாரை தொலைபேசியில் அழைத்து, தாங்கள் பெட்ரோல் ஊற்றி தங்களையும் பெட்ரோல் நிலையத்தையும் கொளுத்திக்கொள்ள இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்கள்.
உடனடியாக பொலிசார் Canterburyயிலுள்ள அந்த பெட்ரோல் நிலையத்துக்கு விரைய, அங்கே தங்கள் மீது ஈரம் சொட்டச்சொட்ட பெட்ரோலை ஊற்றிக்கொண்டு நின்றிருந்திருக்கிறார்கள் இருவரும்.


Bethanyயின் கையில் லைட்டர் ஒன்று இருக்க, பொலிசார் தங்களை நெருங்கினால் தீவைத்துக்கொள்வதாக மிரட்டியிருக்கிறார் அவர். அவர் லைட்டரை இயக்க, அதிர்ஷ்டவசமாக அந்த லைட்டர் இயங்காமல் போக, பொலிசார் பாய்ந்து சென்று அவரைப் பிடித்துள்ளார்கள்.

அப்போது சகோதரிகள் இருவரும் மது அருந்தியிருந்தது தெரியவந்துள்ளது. தங்கள் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு, பெட்ரோல் நிலையத்தைக் கொளுத்திவிடுவதாக திகிலை ஏற்படுத்திய சகோதரிகள் இருவருக்கும் மூன்று ஆண்டுகள், ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.