வவுனியா பொன் மீடியா கலையகம் பெருமையுடன் வழங்கும் “கொல்லாதே” குறும்படம்!!

749

Kollathey

வவுனியா பொன் மீடியயா கலையகம் வழங்கும் S.சுபாசிங்கம் இயத்தில், ஸ்ரீநிவாஸ் நடிப்பில் “கொல்லாதே” குறும்படம் சிசு கொலைகளின் தாக்கமும் அறிவுரையும், குழந்தையின் எதிர் கால வெளிப்பாட்டையும் உணர்த்தி வெளியாகியுள்ளது.

“கொல்லாதே” குறும்படம், கருக்கலைப்பு, கருவிலே குழந்தையை கொல்ல நினைக்கும் தாய்மார்களுக்க்கான ஓர் கருத்துப் படமாக இக்குறும்படம் வெளிவந்துள்ளது.

மேற்படிப்பை படித்து வீடு திரும்பும் மகனை நினைத்து பெருமிதமடையும் தாய், அந்த மகனை கருவில் கொல்ல மருத்துவரை நாடிஇருந்ததையும், மருத்துவரின் கருத்தை உள்வாங்கி மகனை பெற்று, வளர்த்து படிக்க வைக்கிறார் என்பதை சில காட்சி கண்ணோட்டத்தில் இக்குறும்படம் உணர்த்தியிருக்கிறது.

சிசுவை கருவிலேயே கலைக்க நினைப்பவர்களுக்கு இக்குறும்படம் ஓர் சில கருத்துக்களை கூறுகின்றது.

இக்குறும்படத்தின் இயக்குனர் S.சுபாசிங்கம், நடிகர்கள், ஒளிபதிவாளர் மற்றும் அனைத்து தொழிநுட்ப கலைஞர்களுக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.