தற்கொலை செய்து கொண்ட அம்மா : மேடையில் இயக்குனரால் சங்கடப்பட்ட பிரபல தொகுப்பாளினி!!

1053


விஜே கல்யாணி..தமிழில் குட்டி நட்சத்திரமாக இருந்து சீரியல், நிகழ்ச்சி தொகுப்பாளினி, படங்கள் என்று பணியாற்றி பிரபலமானவர் தான் விஜே கல்யாணி. பிரபுதேவா நடித்த அள்ளித்தந்த வானம், ரமணா போன்ற படங்களில் குட்டி நட்சத்திரமாகவும், ஜெயம் படத்தில் கதாநாயகிக்கு தங்கையாக நடித்து பிரபலமானார்.அதன்பின் அண்ணாமலை, சின்னப்பாப்பா பெரியப்பாப்பா உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து வந்தார். பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வந்த கல்யாணி திருமணத்திற்கு அடையாளம் தெரியாமல் காணாமல் போனார். தற்போது பிரபல தனியார் யூடியூப் சேனலில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், சிறு வயதில் இருக்கும் போதே தன்னுடைய அம்மா தற்கொலை செய்து கொண்டு இறந்ததாகவும் கூறியுள்ளார். அவர் நினைவான தன் கையில் டேட்டூ குத்தியுள்ளதையும் காட்டியுள்ளார் கல்யாணி. மேலும் 7, 8 வயது இருக்கும் போது ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன்.


அப்போது மேடையில் எனக்கு சுச்சு(சிறுநீர்) வந்தததாக இயக்குனரிடம் சைகையில் கூறினேன். 2 நிமிஷம் என்று சொல்லி ஒரு மணி நேரமாக நிற்கவைத்துவிட்டார். என்னால் பொருக்கமுடியாமல் மேடையிலேயே சுச்சு போய் விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

அறியாத வயதில் இப்படி செய்ததை வெளிப்படையாகவும் கூறியுள்ளார். மேலும் என் பொண்ணு Gay- வாக இருந்தாலும் நான் சப்போர்ட் செய்வேன் என்றும் கூறியுள்ளார் கல்யாணி ரோஷித்.