மாற்றுத்திறனாளி தம்பதிக்கு வாட்ஸ் அப் மூலம் நிதி திரட்டி வளைகாப்பு : நெகிழ்ச்சியான தருணம்!!

1453


தமிழகத்தில்..



தமிழகத்தில் மாற்றுத்திறனாளி கணவன் மனைவிக்கு வாட்ஸ்அப் குழு மூலம் நிதி திரட்டி வளைகாப்பு நடத்தி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி குமார் (28) அவரது மனைவி மாற்றுத்திறனாளி தமிழ்ச்செல்வி (24) ஆகிய இருவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது.




ஏற்றுக்கொள்ளாததால் தற்பொழுது குமார் மற்றும் தமிழ்ச்செல்வி ஆகிய இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர். குமார் புதுப்பாளையத்தில் ஒரு ஜெராக்ஸ் கடையில் குமாஸ்தாவாக வேலை செய்து வருகிறார். போதிய அளவில் வருமானம் இல்லாததால், குமார் அவரது மனைவி தமிழ்ச்செல்வி ஆகிய இருவரும் வாடகை வீட்டில் மிகவும் வறுமையில் வாடி வந்தனர்.


இந்நிலையில் குமாரின் மனைவி தமிழ்ச்செல்வி தற்பொழுது கர்ப்பமாக உள்ளார். இவர்களது வறுமையை பற்றி ஒரு சிலர் அன்னை தெரசா என்ற ஒரு வாட்ஸப் குழுவில் பதிவிட்டுள்ளனர்.

வாட்ஸ்அப் குழுவில் கண்ட அனைவரும் உதவி தர முன்வந்த பின்னர் நிதி திரட்டி இன்று ஆரணி அருகே சந்தவாசல் பகுதியில் ஃபீனிக்ஸ் சிறப்பு பள்ளியில், குமாரின் மனைவி தமிழ்ச்செல்விக்கு அன்னை தெரசா வாட்ஸ்அப் குழுவை சேர்ந்தவர்கள் சிறப்பாக வளைகாப்பு நடத்தி வைத்தனர்.


இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் அந்த வாட்ஸ்அப் குழுவைச் சேர்ந்த நண்பர்கள் சீர்வரிசை வைத்து வளைகாப்புக்கு வந்தவர்களுக்கு அறுசுவை உணவும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அம்சமாக 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.