வவுனியாவிலும் ஜோசப் ஸ்ராலின் கைது செய்யப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

851


ஆர்ப்பாட்டம்..



இலங்கையின் ஆசிரியர் சங்கத்தின் தலைவரான ஜோசப் ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து வவுனியா ஆசிரியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த போராட்டங்களானது வவுனியா, சைவப்பிரகாச மகளிர் கல்லூரி உள்ளிட்ட பல பாடசாலைகளின் முன்பாக ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டது.




இதன்போது, ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்யுமாறு போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் வலியுறுத்தி இருந்தனர்.


இதன்போது அவர்கள் பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.