இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : சடுதியாக குறைந்த விலைகள் : விபரம் உள்ளே!!

1117


மகிழ்ச்சியான செய்தி..இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அத்தியாவசிய பொருட்களின் விலைகள் வரலாறு காணாத அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.இந்நிலையில் அத்தியவாசிய பொருட்களின் விலைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, புறக்கோட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. பருப்பு, சீனி , கிழங்கு, வெங்காயம், மிளகாய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கணிசமாக குறைந்துள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய 600 ரூபாவாக இருந்த பருப்பு மொத்த விலை 410 ரூபாவாகவும், 330 ரூபாவாக இருந்த சீனியின் மொத்த விலை 270 ரூபாவாகவும், 215 ரூபாவாக இருந்த உருளைக்கிழங்கின் மொத்த விலை 150 ரூவாகாவும் குறைக்கப்பட்டுள்ளது.


600 ரூபாவாக இருந்த வெங்காயத்தின் மொத்த விலை 420 ரூபாவாகவும், 1900 ரூபாவாக இருந்த மிளகாய் விலை 1300 ஆகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் டொலரின் ஸ்திரத்தன்மை மற்றும் வங்கிகள் டொலர்களை வழங்குவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இலங்கை படிப்படியாக வழமைக்கு திரும்புவதாக அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனினும் இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்குமா என்பது தொடர்பிலும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.