முட்டை தருவதாகக் கூறி 8 வயது சிறுமியை வல்லுறவு செய்த நபர் விஷம் குடித்தார்!!

516

Abuse8 வயது பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர் விஷம் அருந்திய நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முந்தல் – சிறியகும்புக்கடவல பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவியே பாதிக்கப்பட்டுள்ளார். கடை ஒன்றுக்கு முட்டை வாங்கச் சென்ற சிறுமியை கடைக்குள் அழைத்துச் சென்று கடை உரிமையாளரான சந்தேகநபர் வல்லுவுக்கு உட்படுத்தியதாக தெரியவருகிறது.

பின்னர் சிறுமி வீடு திரும்பி தாயிடம் தனக்கு நேர்ந்ததை தெரிவித்ததை அடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாடு செய்யப்பட்டதை தெரிந்து கொண்ட சந்தேகநபர் விஷம் அருந்தியுள்ளார்.

முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.