எதிர்வரும் இரு தினங்களுக்கான மின்வெட்டு குறித்து இன்று வெளியாகியுள்ள அறிவிப்பு!!

415


மின்வெட்டு..எதிர்வரும் இரு தினங்களுக்கான மின் விநியோக துண்டிப்பு தொடர்பில் புதிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதேவேளை இன்றைய தினம் ஒரு மணிநேரம் மட்டுமே மின் துண்டிப்பு செய்யப்படும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நேற்றைய தினம் அறிவித்திருந்தது.
நாட்டில் நிலவும் அசாதாரண நிலை காரணமாக ஏற்பட்டுள்ள மழைவீழ்ச்சியினால் மின்னுற்பத்திக்கான நீர்த்தேக்கங்கள் நிறைந்து வழியத் தொடங்கியுள்ளது.


அதன் காரணமாக நீர்த்தேக்கங்கள் மூலமான மின்னுற்பத்தியில் தற்போதைக்கு உற்பத்தித்திறன் சற்று அதிகரித்துள்ளது. அதனை முன்னிட்டு இன்று ஒரு மணிநேரம் மட்டுமே மின் துண்டிப்பு செய்யப்படும் என நேற்றைய தினம் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.