‘என் கணவருக்கு 3 துணைவிகள் வேணும்’ அவங்களோட சண்டை போட மாட்டேன்” .‌. இணையத்தில் சுயம்வரம் நடத்தும் மனைவி!!

1181


தாய்லாந்தில்..தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவருக்காக மூன்று துணைகளை தேடி வரும் சம்பவம் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.தாய்லாந்து நாட்டின் பாங்காக் பகுதியை சேர்ந்தவர் Pattheema. இவர் தான், தனது கணவருக்கு மூன்று துணைவிகள் வேண்டும் என தற்போது இணையத்தில் தேடி வருகிறார்.
இது குறித்து அந்த பெண் பகிர்ந்த தகவலின் படி, “ஒரு சில நிபந்தனைகள் மட்டும் தான். பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும். படித்திருக்க வேண்டும். மூன்று பெண்களுக்கும் மாதம் சுமார், £342 சம்பளம் (இந்திய மதிப்பில் 33 ஆயிரம் ரூபாய்) வழங்கலாம்.


இரண்டு பேர் எனது கணவனின் அலுவலக பணிகளில் உள்ள வேலைகளை கவனித்துக் கொள்ள வேண்டும். மற்றொருவர் என்னையும் எனது கணவர் மற்றும் குழந்தைகளையும் நல்ல முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும்” என Pattheema குறிப்பிட்டுள்ளார்.

 

அது மட்டுமில்லாமல், அந்த மூன்று பெண்களிடமும் தான் நிச்சயம் சண்டை போட மாட்டேன் என உத்தரவாதம் தருவதாகவும், எனது கணவரே அவர் யாருடன் தூங்க வேண்டும் அல்லது தங்க வேண்டும் என்பதை தேர்வு செய்வார் என்றும் Pattheema கூறி உள்ளார்.


தன் சொந்த மனைவியே தனது கணவருக்காக மூன்று துணைவிகளை ஆன்லைனில் தேடி வரும் சம்பவம் அதிகம் பேசுபொருளாக மாறி இருந்தது. ஆனால் ஏன் அப்படி தனது கணவருக்காக மூன்று பெண்களை Pattheema தேடிக் கொண்டிருக்கிறார் என்பதையும் அவர் விளக்கி உள்ளார்.

Pattheema மற்றும் அவரது கணவர் இணைந்து, பிசினஸ் ஒன்றை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழ்நிலையில், நீண்ட நாட்களாக தொடர்ந்து மன அழுத்தத்தின் மூலம் Pattheema அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், தனது கணவருடன் அவரால் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை என்றும், அவருடன் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. தன்னால் தனது கணவரை சிறந்த முறையில் பார்த்துக் கொள்ள முடியாது என Pattheema-வுக்கு தோன்றிய பிறகு தான், அதற்காக மூன்று பெண்களை தேர்ந்தெடுத்து கணவரின் துணைவியாக மாற்ற வேண்டும் என்றும் அவர் முடிவு செய்துள்ளார்.

அப்படி தேர்வு ஆகும் பெண்கள், தனது கணவருடன் மிகச் சிறந்த முறையில் நேரத்தை கழிக்க வேண்டும் என்றும் அவருக்கு மிகவும் உதவிகரமாக இருக்க வேண்டும் என்பதும் தான், Pattheema-வின் விருப்பமாக உள்ளது.

இது பற்றி பேசும் அவரது கணவர், முதலில் எனது மனைவியின் முடிவைக் கேட்டு சற்று அதிர்ச்சி அடைந்தேன் என்றும், ஆனால் எனது மனைவி இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளதால் அதனை நான் நிராகரிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 3 துணைவிகளை கணவருக்காக தேடி வரும் Pattheema, இதுவரை இரண்டு பேரை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.