நாயை சுற்றி வளைத்த மலைப்பாம்பு ; துணிச்சலுடன் போராடி உயிரை காப்பாற்றிய 3 சிறுவர்கள் : வைரல் வீடியோ!!

1412


மலைப்பாம்பின்..மலைப்பாம்பின் பிடியில் சிக்கிய வளர்ப்பு நாயை மூன்று சிறுவர்கள் துணிச்சலாக போராடி காப்பாற்றும் வீடியோ வைரலாகியுள்ளது.குறிப்பிட்ட அந்த வீடியோவில் மலைப்பாம்பு நாயின் பின்னங்காலை சுற்றி வளைத்து பிடித்து இறுக்குகிறது. கையில் இரும்பு தடி எடுத்து வந்த சிறுவன், மலைப்பாம்பின் தலைப்பகுதியை புல்வெளியை நோக்கி அமுக்கி பிடித்து கொள்கிறார்.
மற்ற இரண்டு சிறுவர்களும், மலைப்பாம்பின் பிடியில் இருந்து நாயை விடுவிக்க உதவுகின்றனர். இந்தச் சம்பவத்தால் நாய் சற்றுக் குழப்பமடைந்ததாகத் தெரிகிறது. இருப்பினும் எவ்வளவு கடினமாகத் தோன்றினாலும், அந்த சூழ்நிலையிலிருந்து நாய்க்கு உதவுவதில் மூன்று சிறுவர்களும் மிகுந்த தைரியத்தை வெளிப்படுத்தினர்.


மலைப்பாம்பின் தலை,வால் என சிறுவர்கள் தங்கள் கைகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த நிலையில், மரண பிடியில் இருந்த நாயை மீட்டனர்.

ஒருவழியாக எவ்வித காயமின்றி நாய் உயிர் தப்பியது. அதற்கு பிறகு அந்த மலைப்பாம்பிற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. இந்த வீடியோ தற்போது பகிரப்பட்டு வருகிறது.