பேஸ்புக்கின் இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்குமான வருமானம் எவ்வளவு தெரியுமா??

522

Facebookசமூக வலைத்தளங்களுள் முன்னணியில் திகழும் பேஸ்புக் நிறுவனம் 2014ம் ஆண்டின் முதலாவது காலாண்டிற்கான தனது வருவாய் தொடர்பிலான அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

இதன்படி முதலாவது காலாண்டு வருமானமாக 2.5 பில்லியன் டொலர்களைப் பெற்றுள்ளது.

இது கடந்த வருடத்தின் முதலாவது காலாண்டு வருமானத்தை விடவும் 72 சதவீத அதிகரிப்பை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாதம் தோறும் 1.28 பில்லியன் வரையானவர்கள் பேஸ்புக் தளத்தில் இணைந்திருப்பதாகவும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.