திருமணத்திற்காக 6 வருஷம் தொல்லை : 30 போன் நம்பர்களை பிளாக் செய்த நடிகை!!

1149


நடிகை..குழந்தை நட்சத்திரமாக இருந்து 7ஓ கிளாக் என்ற கன்னட படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி மலையாளம், கன்னடம், தெலுங்கு என நடித்து வந்தவர் நடிகை நித்யா மேனன். நடிகர் சித்தார்த் நடிப்பில் நூற்றெண்பது படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.அதன்பின் வெப்பம், மாலினி22 பழையகோட்டை போன்ற படங்களில் நடித்தார். தமிழில் ஒருசில படங்களில் நடித்த நித்யா மேனன், மெர்சல், காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, 24, இருமுகன், சைக்கோ போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.
தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் ஆகஸ்ட் 18ல் வெளியாகவுள்ள திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் காலில் அடிப்பட்டு வீல் சாரில் வந்து கலந்து கொண்டு ஷாக் கொடுத்துள்ளார்.


இந்நிலையில், நித்யா மேனனுக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி சமுகவலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இது உண்மையில்லை என்று நித்யா மேனன் விளக்கம் அளித்திருந்தார். இந்த செய்தி வெளியாக சந்தோஷ் வர்க்கி என்ற நபர் தான் காரணமாம்.

நித்யா மேனன் மீது ஆசைப்பட்டதாகவும் 6 வருடங்களாக என்னை திருமணம் செய்து கொள்ளும் படி டார்ச்சர் செய்ததாகவும் கூறியுள்ளார். 30க்கும் மேற்பட்ட நம்பர்களை பிளாக் செய்துவிட்டேன், அதன்பின்பும் அந்த நபரின் டார்ச்சர் அடங்கவில்லை என்று புகாரளித்திருக்கிறாராம் நடிகை நித்யா மேனன்.