3 பெண்களின் தலை துண்டிப்பு : காதலியுடன் கைதான சீரியல் கொலையாளி.. விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்!!

1239


கர்நாடகாவில்..கர்நாடகா மாநிலம் மைசூரில் 3 பெண்களின் உடல்களை கால்வாயில் துண்டு துண்டாக வீசிய சீரியல் கொலைக்காரன் சிக்கியது எப்படி என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அவருடன் அவரது காதலியும் பிடிபட்டார்.கடந்த ஜூன் மாதம் மைசூர் அருகே உள்ள கால்வாய் ஒன்றில் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. அதே போல் அங்கிருந்து சிறிது தூரத்தில் இன்னொரு கால்வாயில் இன்னொரு பெண்ணின் தலை துண்டிக்கப்பட்ட சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தலையில்லா உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நாளன்று ஒரு செல்போனின் சிக்னல் மட்டும் மைசூரிலிருந்து மாண்டியாவுக்கு சென்றதையும் அதே செல்போன் சிக்னல் மீண்டும் மைசூர் வந்ததையும் போலீஸார் கண்டறிந்தனர்.


போலீஸ் லத்திசார்ஜ் செல்போன் சிக்னல் இதையடுத்து அந்த செல்போன் சிக்னலை வைத்து பெங்களூரைச் சேர்ந்த சித்தலிங்கப்பா என்பது போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்த சித்தலிங்கப்பா பல பெண்களுடன் நெருக்கமாக பழகி அவர்களுடன் அவ்வப்போது உல்லாசம் அனுபவித்து வந்ததும் தெரியவந்தது.

இவ்வாறு அவ்வப்போது புது புது பெண்களாக ஜாலியாக சுற்றி திரிந்து வந்ததும் தெரியவந்தது. சித்தலிங்கப்பா மேலும் சித்தலிங்கப்பாவுக்கு பாலியல் தொழிலாளிகளிடமும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. உல்லாசமாக இருக்க அப்பாவி பெண்கள் ஏதும் கிடைக்காத பட்சத்தில் பாலியல் தொழிலாளிகளிடம் சென்று தனது இச்சையை தீர்த்துக் கொள்வதும் அவரது வாடிக்கையாம்.


அந்த வகையில் பாலியல் தொழிலாளியான சந்திரகலா என்பவருடன் சித்தலிங்கப்பா நெருக்கமாக இருந்துள்ளார். அவ்வாறு அந்த பெண்ணை பார்க்க அவ்வப்போது சென்றதால் காதல் மலர்ந்தது. இதையடுத்து பாலியல் தொழிலாளியாக ஏன் இருக்கிறாய் என கேட்டதற்கு என்னை பல பெண்கள் ஏமாற்றி இந்த தொழிலில் தள்ளிவிட்டதாக சந்திரகலா தெரிவித்திருந்தார்.

இதனால் இருவரும் சேர்ந்து பெண்களை கொல்ல திட்டமிட்டிருந்தனர். சித்ரதுர்கா அந்த வகையில் சித்ரதுர்கா மாவட்டம் சாம்ராஜ்நகரை சேர்ந்த சித்தம்மா மற்றும் ஹோசதுர்காவை சேர்ந்த பார்வதி ஆகியோரை சந்திரகலா மைசூரில் தான் தங்கியிருந்த மெடாகள்ளி என்ற பகுதியில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

அவர்களுக்கு மைசூரு நகரத்தை சுற்றி காண்பித்துள்ளார். அடுத்த நாள் இரவு சந்திரகலாவும் சித்தலிங்கப்பாவும் அந்த இரு பெண்களுக்கும் மயக்க மருந்து கொடுத்தனர். உல்லாசம் இதையடுத்து அவர்களுடன் சித்தலிங்கப்பா உல்லாசம் அனுபவித்துள்ளார்.

பின்னர் இருவரும் சேர்ந்து அந்த இரு பெண்களின் கழுத்தையும் வெட்டியுள்ளனர். அந்த தலையில்லாத உடல்களை இரு கவர்களில் போட்டு அதை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றனர். அப்போது ஒரு உடலை பாண்டவபுரம் கால்வாய் அருகேயும் இன்னொன்றை அரகேரி கால்வாய் அருகேயும் வீசிவிட்டு வீடுதிரும்பினர்.

அடுத்த வீடு இதையடுத்து பெங்களூரில் அடுகோடி எனும் இடத்தில் சித்தலிங்கப்பாவும் சந்திரகலாவும் வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு குமுதா என்ற பெண்ணையும் மேற்கண்ட பாணியில் கொலை செய்துள்ளனர். அந்த பெண் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்துவிட்டு தும்கூர் தாபத்பேட்டையில் மற்றொரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர்.

5 பெண்களை கொல்ல திட்டம் அப்போதுதான் அவர்களை போலீஸார் கைது செய்தனர். மேலும் 5 பெண்களை கொலை செய்வதற்காக பெயர் பட்டியலையும் சித்தலிங்கப்பாவும் சந்திரகலாவும் தயாரித்து வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. காவல் துறை அவர்கள் இருவரையும் சரியான நேரத்தில் கைது செய்திருக்காவிட்டால் மேலும் 5 பெண்களின் உயிர் பறிபோயிருக்கும்.