திருமணமாகி தொல்லை கொடுத்து கேவலப்படுத்திய கணவர் குடும்பத்தார் : விஜே மகேஷ்வரி பட்ட கஷ்டம்!!

1162


சினிமாவில்..சினிமா என்றாலே நடிகைகளுக்கு ஏற்படும் கஷ்டங்களை தாண்டி திருமணமாகி கண்வர் குடும்பத்தினர் செய்யும் கண்டிஷன்களாலே சினிமாவை விட்டே வெளியேறி விடுகிறார்கள். அதையெல்லாம் பண்ணமுடியாது என்று கூறும் நடிகைகள் விவாகரத்து செய்து திருமணத்தை செய்து கொள்கின்றனர்.அந்த நிலைக்கு தள்ளப்பட்டவர் தான் விஜே மகேஷ்வரி. விஜே பணியாற்றி பின் சின்னத்திரை சீரியலில் நடித்து வந்த விஜே மகேஷ்வரி. சாணகியன் என்பவரை சிறு வயதிலேயே திருமணம் செய்து 2010ல் கேசவ் என்கிற மகன் இருக்கும் நிலையில் விவாகரத்து செய்து பிரிந்தார்.
விவாகரத்துக்கு என்ன காரணம் என்று இதுவரையில் எங்கும் கூறாமல் இருந்த மகேஷ்வரி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார். தன் மகன் மற்றும் அம்மாவுடன் தனியாக வாழ்ந்து வருகிறேன். திருமணத்திற்கு பின் தன் கணவர் தன்னை மிகவும் அடிமையாக நடித்தியதாகவும், நண்பர்களுடன் பழகக்கூடாது, ஆண்களுடன் நடிக்கக்கூடாது என்று பல கண்டிஷன் களை போட்டதாகவும் கூறியுள்ளார்.


மேலும் ஒரு கட்டத்தில் சீரியலில் நடிப்பதையே நிறுத்த கூறி அதை மீறி நடிச்சா மானம் போய்விடும் என்று கணவர் வீட்டார் பிரச்சனை செய்தார்கள் என்றும் கூறியுள்ளார்.

கண்வர் இப்படி டார்ச்சர் செய்ததால் பணத்திற்காக சிரமம்பட்டேன் என்றும் தன் அம்மாவுக்கு கூட உதவி செய்யக்கூடாது என்று கூறினார்கள். அம்மாவும் நான் எங்கயாவது போய் வேலை பார்க்கிறேன் நீ வாழ்க்கையை பாரு என்று கூறினார்கள்.


இந்த பிரச்சனையில் இருந்து எப்படி வெளியேறுவது என்று நினைத்து தான் விவாகரத்து முடிவை எடுத்ததாகவும் தற்போது நிம்மதியாக மகனுடன் சந்தோஷமாக இருப்பதாகவும் ஆதங்கத்துடன் கூறியுள்ளார் விஜே மகேஷ்வரி. சமீபத்தில் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவியில் ஒருவராக நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.