ராணி வேடத்தில் நடிக்கும் அனுஷ்காவுக்கு 5 கோடி நகைகள்!!

619

Anuska

அனுஷ்கா ருத்ரமாதேவி என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார். தமிழிலும் இப்படம் வருகிறது. இதில் அனுஷ்கா ராணி வேடத்தில் வருகிறார். இதற்காக வாள் சண்டை கற்றுள்ளார். குதிரையேற்றம் பயிற்சியும் எடுத்துள்ளார்.

ராணி கரக்டர் என்பதால் அனுஷ்காவுக்கு பிரத்யேகமாக தங்கத்தில் நகைகள் வடிவமைக்கப்பட்டது. 5 கோடிக்கு நகைகள் வாங்கப்பட்டன. இவற்றை அணிந்து அனுஷ்கா நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அனுஷ்காவுடன் ராணா, கிருஷ்ணம் ராஜூ, பாபாசேகர், கேத்ரினா திரேஷா, ஹம்சநந்தினி போன்றோரும் நடிக்கின்றனர். குணசேகர் இயக்குகிறார்.

அனுஷ்கா ஏற்கனவே அருந்ததி படத்தில் வித்தியாசமான கரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ருத்ரமாதேவி படமும் அனுஷ்கா திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என்கின்றனர். அரண்மனை அரங்குகள் அமைத்து அதிக பொருட்செலவில் இப்படத்தை எடுக்கின்றனர். இளையராஜா இசையமைக்கிறார்.