
இயக்குனர் விஜயிடம் மதம் மாறும்படி அமலாபால் நிர்ப்பந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் ஜூன் 12ம் திகதி திருமணம் நடக்க உள்ளது. விஜய் இயக்கிய தெய்வ திருமகள், தலைவா படங்களில் அமலாபால் நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது.
திருமணத்துக்கும் தயாராகிறார்கள். விஜய் இந்து மதத்தைச் சேர்ந்தவர். அமலாபால் கிறிஸ்தவ மதம். திருமணத்துக்கு முன்பு கிறிஸ்தவ மதத்துக்கு மாறி விடும்படி விஜயை அமலாபாலும் அவரது பெற்றோரும் வற்புறுத்துகிறார்கள். ஆனால் விஜய்க்கு மதம் மாற விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே பிரபுதேவாவை காதலித்த நயன்தாரா அவரை திருமணம் செய்து கொள்வதற்காக கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார். ஆனாலும் திருமணம் நடக்கவில்லை. அமலாபாலோ விஜயை கிறிஸ்தவ மதத்துக்கு மாறச் சொல்கிறார். அவர் வற்புறுத்தலை விஜய் ஏற்பாரா, மாட்டாரா என்பது தெரியவில்லை.





