அசிங்கப்படுத்திட்டாங்க ‘ஆல்அவுட்’ குடித்து அட்மிட் ஆன நடிகை : நள்ளிரவில் எஸ்கேப்பானவரை தேடிய போலீஸ்!!

1517

திண்டுக்கல்லில்..

யூடியூபரிடம் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சர்ச்சையில் சிக்கி உள்ள துணை நடிகை திவ்யபாரதி கொசு மருந்து குடித்து தற்கொலை முயன்றதால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து அவர் மாயமான நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்த பகவலவன் ராஜா என்பவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அதில் கவிதைகள் தொடர்பான வீடியோக்களை அவர் வெளியிட்டு பணம் சம்பாதித்து வந்துள்ளார்.

இதில் நடிப்பதற்காக நடிகை ஒருவரை தேடி வந்துள்ளார். அப்போது ஏஜண்ட் ஒருவரின் மூலம் திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பைச் சேர்ந்த திவ்ய பாரதி என்பவர் அறிமுகமாகி உள்ளார். இவர் உள்ளூர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும், சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

துணை நடிகை திவ்யபாரதி சினிமாவில் துணை நடிகையாகவும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் விளம்பரம் மற்றும் தொகுப்பாளராக நடித்து வந்துள்ளார். இவரை வைத்து கவிதை தொகுப்பினை வீடியோவாக எடுத்து பகலவன் ராஜா வெளியிட்டுள்ளார். இதனையடுத்து திவ்யபாரதி பகலவன் ராஜா அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

மேலும் தனது குடும்பத்துடன் கொடைக்கானலில் உள்ள பகலவன் ராஜா வீட்டிற்கு சென்று தங்கி குடும்ப ரீதியாக நட்பாக பழகியுள்ளனர். திவ்ய பாரதி பின்னர் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல தவணைகளில் 30 லட்சம் ரூபாய் பணம், பத்து சவரன் தங்க நகைகள் ஆகியவற்றை பெற்றுக் கொண்டுள்ளார் மேலும் தனியாக வீடு எடுத்து அதற்கு பர்னிச்சர் உள்ளிட்ட வகையில் 7 லட்சம் ரூபாயை பகலவன் ராஜா செலவு செய்துள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிய இரு குழந்தைகள் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொய் குற்றச்சாட்டு இதனிடையே பகலவன் ராஜா கூறுவது பொய்யான குற்றச்சாட்டு எனவும் தன்னிடம் தான் அவர் 10 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக நடிகை திவ்யபாரதி கூறியிருந்தார்.

இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்த நிலையில் அவர் பேசிய ஆடியோ மற்றும் ஸ்க்ரீன் ஷாட்கள் வெளியானது. இதன் மூலம் திவ்யபாரதி மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகலவன் ராஜா வலியுறுத்தி வந்த நிலையில் திடீரென அவர் கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

நேற்று இரவு திவ்யபாரதி தாடிக்கொம்பு பகுதியில் உள்ள அவரது வீட்டில் கொசுக்களை விரட்ட பயன்படும் மருந்தை சாப்பிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.இதனை அடுத்து உடனடியாக திவ்யபாரதியின் உறவினர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இரவு திடீரென திவ்யபாரதி மாயமானார். இது குறித்து திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

தீவிர விசாரணை இந்த நிலையில் திண்டுக்கல் மருத்துவமனையில் இருந்து இரவோடு இரவாக எஸ்கேப் திவ்யபாரதி தாடிக்கொம்பு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

போலீசாரின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு நடிகை திவ்யபாரதி கைது செய்யப்படுவாரா என்பது குறித்து தெரியவரும் எனவும் போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.