
T20 உலகக் கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் முகமாக நினைவு முத்திரை மற்றும் நினைவு அட்டைகளை வெளியிட தபால் சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
கிரிக்கெட் வீரர்களின் உருவம் பொறிக்கப்பட்ட முத்திரைகள் மற்றும் நினைவு அட்டைகளை வெளியிடுமாறு, இன்று தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன மூலம் இலங்கை கிரிக்கெட் சபையால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
1996ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை சுவீகரித்தமைக்காக இலங்கை வீரர் முத்தையா முரளிதரனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் முன்னதாக முத்திரை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





