வவுனியா தமிழ் மகா வித்தியாலய மாணவியின் தன்னம்பிக்கை : உடலில் உள்ள குறையை பொருட்படுத்தாது சாதிக்க துடிக்கும் சப்திகா!!

2279


சப்திகா..வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 2022 கணிதப்பிரிவில் கல்வி பயிலும் விசேட தேவைக்குற்பட்ட மாணவி சப்திகா பாடசாலை அதிபரை சந்தித்து அவரது ஆசீர்வாதத்துடன் தமது உயர்தர பரீட்சைக்கு தயாராகிறார்.இரண்டு கைகளும் பிறப்பிலேயே இயங்காத நிலையில் தனது கால்களை பயன்படுத்தி சாதாரண மனிதர்கள் கைகளிலினால் செய்யும் பணிகளை தனது கால்களினால் மாணவி சாதாரணமாக செய்கிறார்.
இந்நிலையில் இம்மாணவியின் கனவு நனவாக இறைவன் ஆசீர்வதிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கூறிவருகின்றனர். உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.