வவுனியா மகிழங்குளத்தில் கிணற்றில் வீழ்ந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று (25) மாலை மரணமடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.ஜெயக்கெனடி தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை பாடசாலை விட்டு வீடு செல்லும் போது தனது சக நண்பர்களுடன் புதிதாக வெட்டப்பட்ட கிணறொன்றில் நீரை பெற முற்பட்ட நிலையில் கிணற்றில் 9 வயதுடைய ஜெயச்சந்திரன் டிலோஜன் என்ற மாணவன் வீழ்ந்துள்ளான்.
இதனையடுத்து மற்றைய நண்பர்கள் தமது வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை தெரியப்படுத்தியதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சிலர் கிணற்றில் வீழ்ந்து கிடந்த சிறுவனை மீட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.
எனினும் இரண்டு நாட்காளாக அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் எவ்வித பலனுமின்றி நேற்று மாலை சிறுவன் மரணமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.





