யாழில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி எடுத்த தவறான முடிவு!!

1190

உதயசங்கர் நிவேதிகா..

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்.
இந்த வருடம் முடிவுற்ற உயர்தரப்பரீட்சைக்கு மருத்துவப்பிரிவில் தோற்றிய குறித்த மாணவி பரீட்சை முடிவுகள் வெளியாக முன்னர் தவறான முடிவு எடுத்து நேற்று முன்தினம்(08.08.2022) திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.



மூன்றாவது முறையாக பரீட்சை எழுதியுள்ளார். தான் எழுதியவற்றை மீள் சோதனை செய்து குறைந்த புள்ளிகள் வரும் என்ற அச்சத்தில் மாணவி இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்தநிலையில் மாணவி தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உதயசங்கர் நிவேதிகா வயது 22 என்ற மாணவியை உயிரிழந்தவர் ஆவார்.

சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் உடல் கூற்று சோதனை இடம்பெற்று உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆனைக் கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்