தனபாலசிங்கம் தர்சிகன்..
பிரான்ஸில் இளம் குடும்பத்தர் இரத்தப் புற்று நோய் காரணமாக உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் இலங்கையில் யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விண் மீன் அமைப்பு ஊடாக பல உதவிகளை செய்து வந்தவர்.
திருமணம் செய்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் குறித்த குடும்பத்தர் உயிரிழந்துள்ளார். தனபாலசிங்கம் தர்சிகன் வயது 31 என்ற இளம் குடும்பத்தரே இவ்வாறு உயிரிழந்தவர்.
குறித்த இளம் குடும்பத்தர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் பலர் இவரது குணநலன்கள் பற்றி பெருமையாக பதிவிட்டு வருவதுடன் தமது ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.