நான்கு மாதங்களில் நடந்த விபத்துக்களில் 690 பேர் உயிரிழப்பு!!

849

Accident

ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் 20ம் திகதி வரை நாடு முழுவதும் நடந்த 8 ஆயிரத்து 390 விபத்துக்களில் 690 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துக்களில் 637 விபத்துக்கள் பாரிய விபத்துக்கள். ஆயிரத்து 570 விபத்துக்களில் 2 ஆயிரத்து 932 பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன் வாகனங்கள் உட்பட உடமைகளுக்கு சேதங்களை ஏற்படுத்திய 3 ஆயிரத்து 251 விபத்துக்கள் நடந்துள்ளதாக பொலிஸ் புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

அதேவேளை கடந்த 10 ஆம் திகதி முதல் 20 ம் திகதி வரை இடம்பெற்ற 89 விபத்துக்களில் 110 பேர் உயிரிழந்துள்ளனர்.