வவுனியாவில் கறுப்புச் சந்தையில் பெற்றோலை விற்பனை செய்த இளைஞன் அதிரடியாக கைது!!

1816


இளைஞர் கைது..வவுனியாவில் கறுப்பு சந்தையில் பெற்றோலை விற்பனை செய்த நிலையில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.வவுனியா, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 21 லீற்றர் பெற்றோலினை நபர் ஒருவருக்கு 1000 ரூபாய் படி விற்பனை செய்த நிலையில் பொலிசார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 21 லீற்றர் பெற்றோலும் மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட இளைஞரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.