399 கோடி வரி மோசடியில் ஈடுபட்ட அதிகாரி குற்றத்தை ஒப்புக் கொண்டார்!!

638

Court

சுமார் 399 கோடி வரிப் பணத்தை மோசடி செய்த வழக்கின் பிரதிவாதியான தேசிய வருமான வரி திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளரான குணசிறி சொய்சா, தனக்கு எதிரான குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்று, வழக்கு விசாரணைகளை எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இதன்போது சந்கேதக நபரின் தனிப்பட்ட சொத்துக்கள் பற்றிய விபரங்களை நீதிமன்றில் அறிக்கையிடுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சில வர்த்தகர்களுடன் இணைந்து 399 கோடி ரூபா பெறுமதி சேர் வரித் தொகையை வருமான வரித் திணைக்கள அதிகாரிகள் இணைந்து மோசடி செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் 14 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.