மொடல் அழகியை வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த நடிகர்!!

663

Act

வீட்டில் அடைத்து வைத்து மொடல் அழகியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பொலிவுட் நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியில் மா துஜே சலாம் , பாகி, கிலாடியோன் கா கிலாடி போன்ற படங்களில் நடித்துள்ள இந்தர் குமார் சர்ஃப் மும்பையின் அந்தேரி பகுதியில் வசித்து வருகிறார்.

இவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாக பொலிசில் புகார் அளித்து, விவாகரத்துக்கு ஏற்பாடு செய்து வரும் இவரது மனைவி தனியே வசித்து வருகிறார்.

இந்நிலையில் அவரது வீட்டின் அருகே உள்ள தனது குடியிருப்புக்கு ஒரு மொடல் அழகியை வரவழைத்த இந்தர் குமார், கதாநாயகி வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி அவரை பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் அவரை வெளியே போக விடாமல் வீட்டினுள் அடைத்து வைத்து பியர் பாட்டிலால் அடித்தும், சிகரெட்டால் சூடு வைத்தும் அந்த நடிகர் இரவு முழுவதும் தன்னை சித்ரவதை செய்ததாக அவரிடம் இருந்து தப்பி வந்த மாடல் அழகி பொலிசில் புகார் அளித்துள்ளார்.

அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிசார் இந்தர் குமாரை கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.

நாளை காலை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவித்த பொலிசார், மொடல் அழகியின் சம்மதத்துடன் உறவு வைத்துக் கொண்டதாக அந்த நடிகர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவித்தனர்.