மருமகளின் தலையுடன் சரணடைந்த மாமியார்… முறையற்ற காதலால் நேர்ந்த பரிதாபம்!!

1681

ஆந்திராவில்..

ஆந்திராவில் விதவை மருமகளைக் கொன்றுவிட்டு, துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல் நிலையம் வந்து சரண் அடைந்த மாமியாரின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டம் கொத்தகோட்டா ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பம்மா (70). இவரது மகனுக்கு திருமணமாகி வசுந்தரா (35) என்ற மனைவியும் இரு பிள்ளைகளும் உள்ள நிலையில் மகன் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் மருமகள் வசுந்தரா பிள்ளைகளுடன் மாமியார் சுப்பம்மா வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த சூழலில், வசுந்தராவுக்கு மாலி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தனிமையில் சந்தித்து கணவன், மனைவியாக இருந்து வந்துள்ளனர். மேலும், கணவன் மறைவிற்கு பிறகு அவரது சொத்துக்களை வசுந்தரா பெயரில் மாற்றப்பட்டுள்ளது.

அந்த சொத்துக்களை வசுந்தரா தனது கள்ளக்காதலன் பெயரில் மாற்ற முயற்சிப்பதாக மாமியாருக்கு தெரிய வரவே இருவருக்கும் அண்மை காலமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், வசுந்தராவை தீர்த்துக்கட்ட மாமியார் சுப்பம்மா மச்சினன் மாது என்பவருடன் சேர்ந்து திட்டம் தீட்டினர். அதன்படி, கடந்த வியாழக்கிழமை அன்று வீட்டில் இருந்த வசுந்தராவை இருவரும் சேர்ந்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

மேலும், வசுந்தராவின் தலையை துண்டித்து ஒரு கவரில் போட்டுகொண்டு ராயச்சோட்டி காவல் நிலையத்தில் சுப்பம்மா சரணடைந்தார். முதலில் மருமகளின் துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல் நிலையத்துக்கு வெளியே காத்திருந்த சுப்பாம்மாவை அங்கிருந்தவர்கள் கவனிக்கவில்லை.

பின்னர் அவரே காவல் நிலையத்துக்குள் வந்து போலீசாரிடம் தலையை காண்பித்துள்ளார். இதை கண்டு ஆடிப்போன காவலர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து பின்னர் சுப்பம்மாவை கைது செய்துள்ளனர்.

கொலை சம்பவம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வரும் போலீசார் க்ரைம் சீன் இடத்துக்கு சென்று வசுந்தராவின் மீதி உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் ஆந்திராவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி மண்ணின் மைந்தனின் நெஞ்சை வருடும் பாடல் – ஏன் பிறந்தோம் இறந்தோமின்றி எதையாவது செய்யுங்கள்