மகளுக்கு இந்தியா எனப் பெயரிட்ட பெற்றோர் : இப்படி ஒரு நாட்டுப்பற்றா!!

1418

இந்தியாவில்..

சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு கொண்டாட்டம் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. இந்த மகத்தான வேளையில், கேரளாவின் கோட்டயம் அருகே கடந்த மாதம் பிறந்த பச்சிளம் பெண் குழந்தைக்கு இந்தியா என பெற்றோர் பெயரிட்டு தேசத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.



கோட்டயம் பாலா புளியன்னூர் வலிய மடத்தில் ரஞ்சித் ராஜன் மற்றும் அவரது மனைவி சனா தம்பதியினர் தங்களின் பெண் குழந்தைக்கு இந்தியா என ஜூலை 12ஆம் தேதி பெயர் சூட்டினர்.

இந்தியா என்ற பெயரில் அனைத்து இந்தியர்களும் பெருமைப்படும் போது, ​​தன் மகளுக்கு இரட்டிப்பு பெருமை ஏற்படும் என்கிறார் தந்தை ரஞ்சித். ராணுவ வீரராக ஆசைப்பட்ட ரஞ்சித்தால் முடியவில்லை.

ரஞ்சித் தனது படிப்பை 9ஆம் வகுப்போடு நிறுத்த வேண்டியதாயிற்று. நாட்டிற்கு தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று ரஞ்சித் கவலைப்பட்டார். அப்படித்தான் தனக்குப் பெண் குழந்தை பிறந்தால் இந்தியா என்று பெயர் வைப்பேன் என்று ரஞ்சித் மனதை தேற்றிக்கொண்டார்.

திருமணத்துக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்ததும், சற்றும் யோசிக்காமல், மகளுக்கு இந்தியா என்று பெயரிட்டார். குழந்தைக்கு இந்தியா என்று பெயர் வைத்தது முதலில் அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்ததாகவும், ஆனால் தற்போது அந்த பெயர் அனைவருக்கும் பிடித்துள்ளதாக ரஞ்சித் கூறுகிறார்.

ரஞ்சித்தும் அவரது மனைவி சனாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ரஞ்சித் பாலாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக உள்ளார். இரு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்புகளை மீறி 2021 அக்டோபர் 31 அன்று சனாவை ரஞ்சித் திருமணம் செய்து கொண்டார்.

கிளிநொச்சி மண்ணின் மைந்தனின் நெஞ்சை வருடும் பாடல் – ஏன் பிறந்தோம் இறந்தோமின்றி எதையாவது செய்யுங்கள்