அடக்கம் செய்ய காசு இல்லை… குழந்தையின் உடலை குப்பை தொட்டியில் வீசிய தந்தை!!

1754

சென்னையில்..

சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில், அடக்கம் செய்வதற்கு காசு இல்லாத காரணத்தால், பிறந்து இறந்த குழந்தையை குப்பை தொட்டியில் வீசியதாக, தந்தை பரபரப்பு வாக்கு மூலம்.

சென்னை, திருவல்லிக்கேணி, சி.என்.கே சாலையில், குப்பை தொட்டியில், நேற்று முந்தினம் இரவு, தெரு நாய்கள், ஒரு சணல் பையை உருட்டிக்கொண்டு இருந்தது. அதில், குழந்தை உடல் இருப்பதை கண்டு, பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் தந்தனர்.

அவர்கள் விரைந்து வந்து, சணல் பையுடன், குழந்தை உடலை மீட்டு, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை பிணவறையில் வைத்தனர். பின்னர், அங்கிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்து, தீவிர விசாரணை நடத்தினர். அதில், ஒருவர் சணல் பையுடன் நடந்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார், திருவல்லிக்கேணி கஸ்தூரி பாய் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரித்ததில், அங்கு ஒரு பெண்ணுக்கு, குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்து இறந்தது தெரியவந்தது. பிரசவ வார்டில் விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்த அந்த பெண் கவிதா (29) அவரின் கணவர் தனுஷ் (33) என தெரியவந்தது.

இறந்து பிறந்த குழந்தையை, செவிலியர்கள் அடக்கம் செய்வதற்கு கூறினர். ஆனால், தனுஷ், குழந்தையை குப்பை தொட்டியில் வீசியதாக போலீசில் தெரிவித்தார். தனுஷை பிடித்து விசாரணை நடத்திய போலீசார், அவரின் சோகத்தை கூறினார். அதில், தன் முதல் மனைவிக்கு குழந்தை பிறந்தது.

ஆனால், அது இறந்து விட்டது. சிறிது நாட்களில், என் மனைவியும் இறந்தாள், நானும் திருட்டு வழக்கில் கைதாகி சிறை சென்றேன். ஜாமீனில் வந்த நான், கவிதாவை காதலித்து, இரண்டாம் திருமணம் செய்தேன்.

ஆனால் அவருக்கும் பிறந்த குழந்தை இறந்தது. என்ன செய்வதனெ தெரியவில்லை. அடக்கம் செய்தால், இடுகாட்டில், 3 ஆயிரம் செலவாகும் என்னிடம் காசு இல்லை. கையில் வெறும் 150 ரூபாய் தான் இருந்தது.

10 ரூபாய்க்கு சணல் பை ஒன்றை வாங்கினேன். அதில், குழந்தை உடலை போட்டு, டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி குடித்தேன். பின்னர், குழந்தையை குப்பை தொட்டியில் வீசியதாக தெரிவித்தார். இந்த சம்பவம் திருவல்லிக்கேணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி மண்ணின் மைந்தனின் நெஞ்சை வருடும் பாடல் – ஏன் பிறந்தோம் இறந்தோமின்றி எதையாவது செய்யுங்கள்