வவுனியாவில் அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் கைது!!

1774


எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் கைது..வவுனியாவில் அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவரை வவுனியா பொலிஸார் நேற்று (12.08.2022) மதியம் கைது செய்துள்ளனர்.வவுனியா நகர மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையிலுள்ள எரிபொருள் மீள் நிரப்பு நிலையத்தில் பணியாற்றும் எரிபொருள் நிரப்பும் ஊழியர் அங்கு கொல்கலன்களில் எரிபொருளை சேமித்து அருகேயுள்ள வியாபார நிலையத்தில் வைத்து,
பெற்றோல் லீற்றர் 1000 ரூபாவிற்கு விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் குறித்த நபரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து 16 லீற்றர் பெற்றோல் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.