காதலனுக்காக முயல் வேடம் போட்டு கொலைகாரனாக மாறிய காதலன்!!

286

Rabbit

இங்கிலாந்தில் காதலனுக்காக கொலை செய்ய முயன்ற காதலனுக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மார்க் பிரிட்சர்டு (46), லீ கார்பின் என்ற இரு ஆண் மகன்களும் ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் லீ கார்பின், மார்கை பிரிந்து மார்ட்டின் வில்லியம்ஸ் என்ற புது காதலருடன் சென்று விட்டார்.

தனது காதலன் பிரிந்து விட்டதால் கோபம் கொண்ட மார்க், வில்லியம்ஸை கொலை செய்வதற்காக முயல் வேடம் அணிந்து கைகளில் பரிசுகள் மற்றும் ரோஜாப்பூக்களுடன் சென்றுள்ளார்.

அவரிடம், இந்த பரிசுப்பொருட்கள் லீ கொடுத்ததாக கூறிவிட்டு குளோரோபோம் கொடுத்து அவரை மயக்கமடையச் செய்ய முயற்சிக்கும்போது இருவருக்கு இடையே சண்டை ஏற்பட்டதில், வில்லியம்சுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொலிஸ் விசாரணையில், மார்க்கின் உண்மை முகம் தெரியவந்ததையடுத்து, அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தற்போது மார்க்கிற்கு, 8 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது, மேலும் கார்பின் மற்றும் வில்லியம்ஸை பிரிந்து வாழும்மாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.