சிகரெட் பிடிப்பது எப்படி என்று குழந்தைக்கு கற்றுக்கொடுத்த அப்பா!!(படங்கள், வீடியோ)

360

ரஷ்யாவில் பெற்ற மகனுக்கே தந்தை ஒருவர் சிகரெட் பிடிக்க கற்றுக் கொடுத்துள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

ரஷ்யாவில் தந்தை ஒருவர் சிகரெட் பிடிப்பதை பார்த்துக்கொண்டிருந்த குழந்தை அவரின் அருகில் சென்றவுடன், அத்தந்தையானவர் அந்த சிகரெட்டை கொடுத்துள்ளார்.

ஆனால் அக்குழந்தை எனக்கு புது சிகரெட் தான் வேண்டும் என்று அடம்பிடித்தவுடன், தந்தையும் புது சிகரெட்டை கொடுத்து, பற்ற வைத்துள்ளார்.

பின்னர் அப்பாவும், மகனும் சேர்ந்து சிகரெட் பிடித்துள்ளனர். இந்த காணொளியானது சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த காணொளியை கண்ட மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

1 2 3 4