சொகுசு வாழ்கைக்காக இன்ஸ்டகிராம் காதல் ஜோடி எடுத்த முடிவு : பரபரப்பு சம்பவம்!!

1734

கோவையில்..

வயதான நபரை தாக்கிவிட்டு பணம் மற்றும் நகைகளை தூக்கிச் செல்ல முயன்ற காதல் ஜோடியை பொதுமக்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்திருக்கின்றனர். இது கோவை முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.



கோவை வடவள்ளி அருகே உள்ள பொம்மணாம்பாளையம் மாரியம்மன்‌கோவில் வீதியில் குடியிருப்பவர் பெரிய ராயப்பன் (வயது 80), இவரது மனைவி ராஜம்மாள் (வயது 67). இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.

உள்ளூரிலேயே திருமணமாகி மகள் சென்றுவிட்ட நிலையில், மகன் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதனால் ராயப்பன் மற்றும் அவரது மனைவி மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்திருக்கின்றனர்.

இந்நிலையில், ஊரிலிருந்து மருமகள் வருவதாக தனது கணவரிடம் கூறிவிட்டு மருத்துவனைக்கு சென்றிருக்கிறார் ராஜம்மாள். வீட்டில் தனியாக இருந்த ராயப்பன் சிறிது நேரத்தில் வெளியே சத்தம் கேட்கவே என்னவென்று பார்த்திருக்கிறார்.

அப்போது இளம் தம்பதி ஒன்று குடிக்க தண்ணீர் வேண்டும் என கேட்டிருக்கின்றனர். தண்ணீர் எடுக்க ராயப்பன் உள்ளே செல்ல, உடனடியாக வீட்டுக்குள் நுழைந்த அந்த தம்பதி ராயப்பனை தாக்கிவிட்டு அங்கிருந்த பணம் மற்றும் நகைகளை திருடியுள்ளனர்.

ராயப்பனை கட்டிப்போட்ட இருவரும் பின்பக்க வாசல் வழியாக தப்பிச்சென்றிருக்கின்றனர். அந்த நேரம் பார்த்து ராயப்பனின் மருமகள் எதிரே வந்திருக்கிறார்.

வீட்டின் பின்பக்கத்தில் இருந்து வந்த இருவரையும் பார்த்து சந்தகமடைந்த அவர் அவர்களிடம் கேள்வி கேட்க, சுதாரித்துக்கொண்ட இருவரும் அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

இதனிடையே அவர் சத்தம்போட அக்கம் பக்கத்தினர் அந்த இளம்பெண்ணை வளைத்துப் பிடித்திருக்கின்றனர். அதனால், அங்கிருந்து தப்பியோடிய இளைஞரும் தாமாகவே மக்களிடம் சரணடைந்திருக்கிறார்.

இதனிடையே தன்னுடைய வீட்டில் ராயப்பன் தாக்கப்பட்டதும் பெண்மணிக்கு தெரியவந்திருக்கிறது.இதனை தொடர்ந்து, வடவள்ளி காவல்துறைக்கு இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரையும் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றிருக்கின்றனர்.

விசாரணையில் இளைஞர் கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (23) என்பதும், இளம்பெண் திருச்சியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்திருக்கிறது.

மேலும், இன்ஸ்டாகிராம் மூலமாக இருவரும் அறிமுகமானதாகவும் சொகுசு வாழ்க்கை வாழ இப்படியான காரியத்தில் இறங்கியதாகவும் அந்த ஜோடி கூறியதாக தெரிகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.