ஆசைவார்த்தை கூறி இளைஞன் செய்த மோசமான செயல் : சிறுமி எடுத்த விபரீத முடிவு!!

1755


தர்மபுரியில்..தமிழக மாவட்டம் தர்மபுரியில் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி உறவுகொண்டு இளைஞர் ஏமாற்றியதால், 12ஆம் வகுப்பு சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தர்மபுரி மாவட்டம் சின்னமாட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் முனிரத்தினம். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
திருமணம் செய்துகொள்வதாக குறித்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகிய முனிரத்தினம், அவருடன் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுள்ளார். பின்னர் சிறுமியை அவர் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.


இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளிக்கு சென்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயமடைந்த சிறுமி அருகில் மாட்டுக் கொட்டகையில் விழுந்து கிடந்துள்ளார்.

அங்கு வந்த சிறுமியின் தான் தாய் மகளின் நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து உடனடியாக குறித்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக சிறுமி அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் பொலிசார் முனிரத்தினத்தை கைது செய்தனர்.