வெளிநாடொன்றில் உயிருக்கு போராடிய விமானிகளை காப்பாற்றிய இலங்கையர்கள்!!

634


தென் கொரியாவில்..தென் கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்தின் போது மூன்று இலங்கையர்கள் விமானியை காப்பாற்றியுள்ளனர். கொரிய விமான படைக்கு சொந்தமான F-4E என்ற போர் விமானம் விபத்துக்குள்ளாகி நெருங்கியுள்ளது.சியோலில் இருந்து 40 கிலோமீட்டர் தெற்கில் உள்ள ஜியோங்கோக் துறைமுகத்திற்கு தெற்கே 9 கிலோமீட்டர் தொலைவில் கடந்த வெள்ளிக்கிழமை கடலில் விழுந்தது. எனினும் அதில் பயணித்த இரண்டு பரசூட் மூலம் கடலில் குதித்தனர்.
இதன்போது அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மூன்று இலங்கையர்கள் உட்பட குழுவினர் அவர்களை காப்பாற்றியுள்ளனர். தங்கள் ஜெட் விமானத்தில் இயந்திரத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கடலோரப் பகுதியை நோக்கிப் பாதையை மாற்றிவிட்டு சென்றதாக கொரிய விமானப்படை தெரிவித்துள்ளது.