பயத்தில் உரைந்து போயுள்ள சாம்பவி படக்குழு!!

454

Sambavi

திருமணம் செய்து கொள்வதாக, இளம் பெண்ணை காதலித்து தனது தேவைகளை தீர்த்துக் கொள்கிறான் நாயகன். அத்தோடு அந்தப் பெண்னின் மொத்த குடும்பத்தையும் தீயிட்டு கொளுத்துகிறான். அப்படி இறந்து போன பெண் ஆவியாக வந்து நாயகன் குடும்பத்தை பழி வாங்கும் படம்தான் சாம்பவி.

இதில் வரும் ஆவி சம்பந்தமான காட்சிகள் எடுக்கும் ஒவ்வொரு சமயமும் யூனிட்டில் உள்ளவர்களுக்கோ, நடிக, நடிகைகளுக்கோ அடிபட்டு காயம் ஏற்படுவது, மயக்கமாகி விழுவது என்று ஏதேனும் ஒரு அசம்பாவித சம்பவம் ஏற்படுகிறது என்கிறார் இந்தப் படத்தின் இயக்குனர் எஸ்.ஆர்.எஸ்.

இதனால் மொத்த படப்பிடிப்பு குழுவினரும் யாருக்கு என்ன விபத்து நடக்குமோ என்ற பயத்தில் நடுங்கிக் கொண்டு இருக்கின்றனர்.