சிவகார்த்திகேயனின் அதிரடி திட்டம்!!

260

SIvaசினிமா உலகில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு நடிகனும் நான் தீவிர ரஜினி ரசிகன் என்று சொல்லி தான் அறிமுகமாகிறார்கள்.

அப்படி முன்னணி நடிகர்கள் முதல் தற்போது உள்ள இளம் நடிகர்கள் வரை அனைவரும் ரஜினியின் ஸ்டைலை ஃபாலோ பண்ணி நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

அந்த வகையில் தன் நடிப்பில் முழுவதும் ரஜினித்தனம் வைத்து நடிப்பவர் சிவகார்த்திகேயன். ஏன் இப்படி நடிக்கிறீர்கள் உங்களுக்கென ஒரு ஸ்டைல் இல்லையை என்று கேட்டால், நான் அவரோட ரசிகன், என் நடிப்பில் ரஜினி ஸாரோட பாதிப்பு இருப்பதில் என்ன தப்பு இருக்கிறது என கூறிவருகிறார்.

டாணா படத்திற்கு பிறகு இயக்குனர் பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். ரஜினி முருகன் என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தில் முழுவதும் தீவிர ரஜினி ரசிகனாக காமெடி கதகளி ஆட திட்டமிட்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இது என்ன பிளான் சிவா, ரஜினி ரசிகன், ரஜினி ஸ்டைல், ரஜினி படம் பெயர் ஒன்னும் புரியலையே. ஒரு வேளை ரஜினி ரசிகர்களை கவர இப்படி நடிக்கிறாரா அல்லது ரஜினியையே தன் பக்கம் இழுக்க நினைக்கிறாரா, இல்லை அடுத்த ரஜினியாக பிளான் போடுராறா?